நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 அச்சுறுத்தலுக்கு மத்தியில், இன்றைய தினம் (03.11.2020)கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யட்டியாந்தோட்ட, இங்கிரியாவத்த பகுதியை கர்ப்பிணி பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த கர்ப்பிணி பெண்ணின் தந்தை பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவராக அடையாளப்படுத்தப்பட்டு, அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமையும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, எம்பிலிபிட்டிய, உடவளவ பகுதியில் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்களின் வீட்டில் தங்கியிருந்த ஒருவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.