இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், தமிழக ஜல்லிக்கட்டு சங்கத்தின் தலைவரும், இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளரும், ஊவா மாகாணத்தின் முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை உலக அளவில் அறியச் செய்த செந்தில் தொண்டமானின் பிறந்த நாள் தமிழகத்திலுள்ள நூற்றிற்கும் மேற்பட்ட கிராமங்களில் கேக் வெட்டியும், கட் அவுட் வைத்தும், அன்னதானம் வழங்கியும், மக்கள் நல திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர். 

சமூக வலைத்தளங்களில் ஏராளமானவர்கள் ‘ஜல்லிக்கட்டை மீட்டெத்த வீரர்’, ‘ஜல்லிக்கட்டு காப்பாளர்’ என பல பட்டங்களை வழங்கி, தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அவருக்கு தமிழ் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் தமிழின உணர்வாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.