சுகாதாரத்துறை நிபுணர்களின் பரிந்துரைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகின்றன - கரு

03 Nov, 2020 | 01:42 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் சுகாதார சேவையின் செயற்திறனை உயர்த்துதல் உள்ளடங்கலாக சுகாதாரத்துறை நிபுணர்களின் பரிந்துரைகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

அவற்றை கருத்திலெடுப்பதன் ஊடாகவே நாடு தொடர்ச்சியாக முடக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் செயற்திறன் வாய்ந்தவையாக இல்லை என்று கரு ஜயசூரிய தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவருகின்றார். 

இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகள், குறிப்பாக எழுமாற்றாக மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் சுகாதாரசேவையின் செயற்திறனை உயர்த்துதல் ஆகிய ஆலோசனைகள் தொடர்ச்சியாகக் கருத்திலெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சுமார் 20,000 மாதிரிகள் நிலுவையில் இருப்பதாகவும் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் முச்சக்கரவண்டிகளில் தங்கியிருக்கும் நிலையேற்பட்டிருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பாகக் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அத்தோடு எமது நாட்டிலுள்ள சுகாதாரசேவை வசதிகளின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களைக் கையாளமுடியுமென்றால் மாத்திரமே நாட்டில் முடக்கத்தை நீக்கி, வழமைபோன்று செயற்பட அனுமதிக்க முடியும்.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் செயற்திறனை அதிகரித்தல், தொற்றுக்குள்ளானவர்களை முறையாக தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக மாத்திரமே இந்தத் தொடர்ச்சியான முடக்கத்தைத் தவிர்க்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15