குழந்தைகளை அதிகம் கவர்ந்த பாடல் 7.04 பில்லியன் பார்வையார்களை எட்டிய பின்னர் யூடியூப்பில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக மாறியுள்ளது.
யூடியூப் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது தளம் என்ற பெயரை பெற்றுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான உள்நுழையும் (Login users) பயனர்கள் இந்த தளத்தை பார்வையிடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மணிநேரங்கள் யூடியூப் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன.
இந்த மிகப்பெரிய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, வீடியோக்களைப் பகிர்வதற்கு பிரபலங்கள் மற்றும் கலைஞர்களின் முதல் தேர்வு யூடியூப் என்பது அசாதாரணமானது.
இந்த தளத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஈடுபாட்டுடன் வைத்திருக்கவும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கலைஞர்கள் உள்ளனர்.
இந்நிலையில், யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவான “ பேபி ஷார்க் ” புதிய சாதனையை படைத்துள்ளது.
சிறு குழந்தைகளை குறிவைத்து 7.04 பில்லியன் பார்வையாளர்களை தாண்டி இதுவரை யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக மாறியுள்ளது.
தென் கொரிய கல்வி உள்ளடக்க படைப்பாளரான பிங்க்போங் தயாரித்த இந்த பாடல் சுறாக்களின் குடும்பத்துடன் தொடர்புடையது.
முதலில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது.
இது கொரியத்தைத் தவிர ஆங்கிலம், சீன, ஜப்பானிய மற்றும் ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தது.
அதன் பின்னர் இது உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட இசைக்குறிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது, இது 2019 ஆம் ஆண்டில் பில்போர்ட் டொப் 100 ஐ முறியடித்தது.
இந்த வீடியோ புவேர்ட்டோ ரிக்கோ தீவைச் சேர்ந்த பொப் பாடல் நட்சத்திரங்களான லூயிஸ் போன்ஸி மற்றும் டாடி யாங்கி ஆகியோரால் 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "டெஸ்பாசிட்டோ" என்ற பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.
குறித்த பாடல் யூடியூப்பில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி பதிவேற்றப்பட்டது. இது 7.04 பில்லியனுக்கும் மிகக் குறைவான பார்வைகளை கொண்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலில் சரியான கை சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் "பேபி ஷார்க்" இன் புதிய பதிப்பு பதிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM