மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆணைக்கட்டிவெளி வயல் காணி ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த  ரி - 56 ரக துப்பாகி மகசீன் 15  , ரவைகள் 373 , மகசீன்  ஒன்று  என்பன நேற்று திங்கட்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மேட்டுநில காணியில் பயிரிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை (02) காணி உரிமையாளர் ஒருவர் மாடுகளால் உழும் நடவடிக்கையினை மேற்கொண்ட போது நிலத்தில் புதைதத்து வைக்கப்பட்டிருந்த இரு பொதிகள் வெளிவந்துள்ளதையடுத்து பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் சென்று அந்த பொதியை சோதனையிட்டபோது அதிலிருந்து ரி - 56  ரக துப்பாக்கி மகசீன் 15, ரவைகள் 373, மகசீன் ஒன்றை மீட்டனர். இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.