மேலும் 39 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராஜகிரியவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 23 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பொரெல்ல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட 8 பொலிஸ் அதிகாரிகளுக்கும் , பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்ட 02 அதிகாரிகளுக்கும் , கெசல்வத்த பொலிஸ் நிலையத்தில் இருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில்  மற்றைய கொரோனா நோயாளர்கள் பெட்டா மற்றும் நிகம்பு பொலிஸ் நிலையங்களிலும் , கொழும்பு நகர போக்குவரத்து பிரிவிலும் , குற்றப் புலனாய்வுத் துறையில் தளா ஒரு அதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.