இ ன்று உலகில் தோன்றும் நோய்கள் அனைத்­துமே எல்லா ஜீவ­ரா­சி­க­ளையும் அச்­சு­றுத்தும் ஒன்­றா­கவே அமைந்து விடு­கின்­றன.. ஆயிரம் கண்­டு­பி­டிப்­புகள் அவ­தா­ர­மாக தோன்­றி­னாலும், அனைத்­தையும் சவா­லுக்­குட்­ப­டுத்தும் நோய்கள் புதிது புதி­தாக தோன்­றத்தான் செய்­கின்­றன. அந்­த­வ­கையில், கடந்த 7 ஆம் திகதி சுகா­தாரக் கல்வி பணி­ய­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கருத்­த­ரங்­கா­னது பல தசாப்த வர­லாற்றை கொண்ட யானைக்கால் நோய் பற்­றி­ய­தாக அமைந்­தது.

அந்­த­வ­கையில், உல­க­ளவில் 81 நாடு­களில் இந்­நோயின் தாக்கம் காணப்­படும் அதே­வேளை, 120 மில்­லியன் மக்கள் இந்­நோ­யினால் பாதிப்­ப­டைந்­துள்­ளனர். குறிப்­பாக இந்­தியா, பங்­க­ளாதேஷ், இலங்கை, பூட்டான், இந்­தோ­னே­ஷியா. தாய்­லாந்து, மாலை தீவு, மியன்மார் உள்­ளிட்ட தென்­னா­சிய நாடு­க­ளி­லேயே இந்­நோயின் தாக்கம் அதி­க­மாக உள்­ளது.

தென்­னா­சி­யா­வி­லுள்ள ஏனைய நாடு­களை விடவும் இலங்­கை­யிலும், மாலை­தீ­விலும் தற்­போது இந்­நோய்க்கு உள்­ளா­வோரின் எண்­ணிக்கை மிகக் குறை­வா­கவே உள்­ளது. என்­றாலும் இலங்­கையில் வட மேல் மாகா­ணத்தில் புத்­தளம், குரு­நாகல் ஆகிய இரு மாவட்­டங்­க­ளிலும், மேல் மாகா­ணத்தில் கம்­பஹா, கொழும்பு, களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும், தென் மாகா­ணத்தில் காலி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை ஆகிய மூன்று மாவட்­டங்கள் உள்­ள­டங்­க­ளாக எட்டு மாவட்­டங்­க­ளிலும் யானைக்கால் நோய் அச்­சு­றுத்தல் காணப்­படும் பிர­தே­சங்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக ஏனைய மாவட்­டங்­களை காட்­டிலும் காலி மாவட்­டத்தில் இந்­நோயின் தாக்கம் சற்று அதி­க­மா­கவே உள்­ள­தென வைத்­திய தரப்­பினர் தெரி­வித்­தனர்..

பொது­வாக யானைக்கால் நோய்க்­கா­ரணி தொற்­றுக்கு உள்­ளான சக­ல­ருக்கும் அதற்­கான அறி­கு­றிகள் உடன் வெளிப்­ப­டாது. இந்நோய் அறி­கு­றிகள் சில­ருக்கு உட­ன­டி­யா­கவும் பல­ருக்குக் கால­தா­ம­த­மா­கியும் வெளிப்­ப­டலாம். சில­ருக்கு வெளிப்­ப­டா­மலும் போகலாம். இந்­நோயின் தாக்­கத்­துக்கு ஆளாகும் ஒரு­வரின் உடல் அவ­ய­வங்­களில் விகா­ரங்கள் ஏற்­ப­டு­வ­துடன் உடலும் பல­வீ­ன­ம­டையும். இவையே இந்­நோயின் பிர­தான பண்­பு­க­ளாக விளங்­கு­கின்­றன. அந்­த­வ­கையில், யானைக்கால் நோய்க்கு இரு வகை­யான பைலே­ரியாப் புழுக்­களே அடிப்­படைக் கார­ணி­க­ளாக உள்­ளன. அவற்றில் ஒன்று கியூலெக்ஸ் நுளம்­பு­களால் பரப்­பப்­படும் உச்­சே­ரி­ரியா பென­ரொப்டி (Wuchereria banerofti) புழு. இப்­பு­ழுவைக் காவிப் பரப்பும் நுளம்­புகள் நீர் தேங்கி அசுத்­த­ம­டைந்­தி­ருக்கும் பகு­தி­யி­லேயே முட்­டை­யிட்டு பல்கிப் பெருகும். அதா­வது தண்ணீர் தேங்கி அசுத்­த­ம­டைந்­தி­ருக்கும் கால்­வாய்கள், உடைந்­துள்ள மல­ச­லக்­கூ­டங்கள் என்­பன இவ்­வ­கை­யான நுளம்­புகள் பெருக ஏற்­பு­டைய சூழ­லாகும்.

மற்­றொரு வகை நுளம்பு தான் மன்­சோ­னியா (Mansonia) இந்­நு­ளம்பு ப்ருகியா மலாயி (Brugia Malayi) என்ற பைலே­ரியா புழுவைப் பரப்­பு­கின்­றது. இவ்­வின நுளம்­புகள் சல்­வீ­னியா மற்றும் பிஸ்­டியா செடிகள் போன்ற நீர்த் தாவரப் பிர­தே­சங்­களில் முட்­டை­யிட்டு பல்கிப் பெரு­கு­கின்­றன. யானைக்கால் நோயின் மூல கார­ணியைப் பரப்பும் இவ்­விரு வகை நுளம்­பு­களும் தான் இலங்­கையில் காணப்­ப­டு­வ­தாக வைத்­திய தரப்­பினர் குறிப்­பி­டு­கின்­றனர்.

யானைக்கால் நோய்க்கு உள்­ளாகி இருப்­ப­வர்­க­ளுக்கு உட­னடி அறி­கு­றி­க­ளாக காய்ச்சல், தசை வலி, உடல் தோலில் வேத­னை­யு­ட­னான சிவப்பு தழும்­புகள் வெளிப்­ப­டுதல், நிணநீர் முடிச்­சுக்­களில் வீக்கம், குறிப்­பாக அக்குள் மற்றும் தொடை இடுக்கு பகு­தி­களில் வீக்கம் ஏற்­படும். நோய்த் தாக்­கத்­திற்கு உள்­ளா­கி­யுள்ள அவ­ய­வங்கள் சார்ந்த பகு­தி­களில் வேத­னை­யுடன் கூடிய வீக்­கமும் காணப்­படும். குறிப்­பாக கை, கால் மூட்­டுக்கள் பெண்­க­ளுக்கு மார்­ப­கங்­க­ளிலும் ஆண்­க­ளுக்கு விதை­யிலும் லேசான வீக்கம் ஏற்­படும். இவ்­வா­றான உட­னடி அறி­கு­றிகள் வெளிப்­பட்­டாலும் தென்­படாத நாட்­பட்ட அறி­கு­றி­களும் உண்டு.

நாட்­பட்ட அறி­கு­றி­க­ளா­வன

* மார்பு, கை, கால் மூட்­டு­களில் வீக்கம்.(பெண்­க­ளுக்கு மார்­ப­கங்­க­ளிலும் ஆண்­க­ளுக்கு விதை­யிலும் லேசான வீக்கம் ஏற்­படும்)

* களங்­களின் இயற்கைத் தோற்­றப்­பாடு மாற்­ற­ம­டைந்து உடல் அவ­ய­வங்கள் விகா­ர­ம­டையும்.

இதே­வேளை, இவ்­வ­ரு­டத்தில் இது­வ­ரையில் கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டையில் 32 பேர் குறித்த எட்டு மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இனங்­கா­ணப்­பட்­டி­ருக்கும் அதே­வேளை, 24 பேர் காலி மாவட்­டத்தை சேர்ந்­த­வர்­க­ளாவர். கடந்த ஆண்டை பொறுத்­த­மட்டில் 98 பேர் இந்­நோயின் தாக்­கத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். 2014 ஆம் ஆண்­டுடன் ஒப்­பிடும் போது 171 இலி­ருந்து 98 பேராக குறைந்­துள்­ளது. அந்­த­வ­கையில் கடந்த வரு­டத்தில் ஒரு­வித வீழ்ச்சி காணப்­பட்­டாலும் முழு­மை­யாக இந்­நோ­யி­லி­ருந்து மக்­கள் விடு­விக்­கப்­பட வேண்டும்.

இந்­நோய்க்­கான சிகிச்­சையின் போது பின்­வரும் மாத்­தி­ரை­களை உட்­கொள்­வதால் நோயின் தாக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்­ள­லா­மென வைத்­தி­யர்கள் பரிந்­து­ரைத்­தனர்.

அவை­யா­வன:

* டி. ஈ. சி.(DEC)

(டைத்தில் காப­மேசின் சிட்ரேட்- Diethylcarbamazine citrate )

* அல்­பெண்­டேசோல் (Albendazole)

இம் மாத்­தி­ரை­களை மருத்­துவ நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­யுடன் ஏதா­வது உணவை உட்­கொண்ட பின்­னரே பாவிக்க வேண்டும். இல்­லா­விடில் வயிறு எரிவு, தலை சுற்று போன்­ற­வா­றான பக்க விளை­வுகள் இம் மாத்­தி­ரை­களால் ஏற்­ப­டலாம். அதே­நேரம் இரண்டு வய­துக்குக் குறைந்த குழந்­தை­க­ளுக்கும், கர்ப்­பிணி பெண்­க­ளுக்கும், இரு வய­துக்குக் குறைந்த குழந்­தை­க­ளுக்குப் பாலூட்டும் தாய்மாருக்கும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற நாட்பட்ட நோயாளர்களுக்கு இம் மாத்திரைகள் வழங்கப்படக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களும் சற்று அவதானமாக செயற்பட வேண்டும்.