நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம, மாவனெல்லை, புளத்கொஹூபிடிய ஆகிய பொலிஸ் வலயங்கள் மற்றும் கலிகமுவ பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு உட்பட்ட பகுதியும் குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் வலயமும் நேற்று மாலையிலிருந்து  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.