கொரோனா பரவலை கட்டுப்படுத்த வடக்கு மாகாணத்தில் தீவிர நடவடிக்கை - வட மாகாண ஆளுநர்

03 Nov, 2020 | 07:34 AM
image

( எம்.நியூட்டன்)

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தினுள், கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காக கடற்படையினர் சிறப்பு சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய கடலோரப் பாதுகாப்பினையும் கடந்து யாராவது அத்துமீறி உள்நுழைவார்களாயின் அல்லது உள்நுழைந்து மறைந்திருப்பார்களாயின் கரையோர வாழ் வடபிராந்திய மக்கள் உள்பட, எவராவது அருகில் உள்ள பொதுச் சுகாதார அதிகாரிகளிடத்திலோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

அத்துடன் அண்மைய நாள்களில் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி அவர்களின் உடல்நிலையில் மாறுபட்ட அடையாளங்களை காணுமிடத்து உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஈடுபடுத்துவதே பொருத்தமானதாகும். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும், பிசிஆர் பரிசோதனைகள் கிரமமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே பொதுமக்கள் இயல்பான சந்தேகங்கள் ஏற்படுமிடத்து எவ்விதமான அச்சமும் அடையாது பரிசோதனைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முடியும்.

இதைவிட, அனைத்து பொதுமக்களும் பொதுவெளியில் நடமாடுவதை இயன்றளவில் தவிர்ப்பதுடன், முகக்கவசம் அணிதல், கைசுத்திகரிப்பு திரவத்தினை பயன்படுத்தல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் ஆகிய மூன்று விடயங்களையும் பின்பற்றுதலும் அவசியமானதாகின்றது. 
சமூகப் பொறுப்புடன் வடக்கு வாழ் ஒவ்வொரு குடிமகனும் நடந்து கொள்வதுடன் மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் மற்றும் பொதுசுகாதரப் பணியாளர்கள் சிறப்புக் கவனம் கொண்டிருப்பதும் அவசியமாகின்றது. அதற்குரிய அறிவுத்தல்களையும் நான் வழங்கியுள்ளேன். 

மங்கல, அமங்கல நிகழ்வுகளின்போது வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகின்றது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்க்களுக்கு திட்டமிட்டு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது முக்கியமான விடயமாகின்றது - என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59