(க.கிஷாந்தன்)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹட்டன் செனன் பகுதியில் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 05.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிக வேகமாக செலுத்தியதாலேயே வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், எனினும் சாரதி பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாகவும் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.