'நாங்க ரொம்ப பிஸி'யில் இணைந்த சமுத்திரகனி

Published By: Digital Desk 4

02 Nov, 2020 | 04:55 PM
image

தமிழ் திரை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும், இயக்குனராகவும் வலம் வரும் சமுத்திரகனி, சுந்தர் சி இயக்கத்தில் தயாராகும் 'நாங்க ரொம்ப பிஸி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

'வீராப்பு' படத்தை இயக்கிய இயக்குனர் பத்ரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாங்க ரொம்ப பிஸி'. இந்தப் படத்தில் நடிகர்கள் ஷாம், பிரசன்னா, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், இயக்குனர் ஆர் என் ஆர் மனோகர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, நடிகைகள் ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடிக்கிறார்கள். 

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சி சத்யா இசையமைத்து வருகிறார். இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் இப்படத்தில் முன்னணி குணச்சித்திர நடிகரான சமுத்திரகனி கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மாயாபஜார்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது என்பதும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னிட்டு நடுத்தர குடும்பங்களில் ஏற்பட்ட தாக்கத்தை மையப்படுத்தி தயாராகும் 'நாங்க ரொம்ப பிஸி' திரைப்படம், தீபாவளி திருநாள் அன்று சன் ரிவியில் நேரடியாக வெளியாகவிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பரபரப்பாக நடித்து வரும் குணச்சித்திர நடிகரான சமுத்திரக்கனி, இயக்குனர் சுந்தர் சி யின் வேண்டுகோளுக்கிணங்க இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிய வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59
news-image

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மே'...

2025-11-07 15:47:19
news-image

சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான்...

2025-11-07 15:31:25
news-image

இணையத்தை அதிர வைக்கும் பிரபுதேவா பட...

2025-11-07 15:23:24
news-image

டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான...

2025-11-07 15:09:59
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2025-11-06 16:56:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தோட்டம் -...

2025-11-06 16:56:26
news-image

செல்ல பிராணியான நாய்களுக்கு பயிற்சி அளிக்கும்...

2025-11-06 16:56:06
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா...

2025-11-06 16:55:47