இன்று அதிகாலை அருவக்காட்டிலிருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் குடிபோதையில் ரயில் பாதையில் நடந்து சென்றவேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வண்ணாத்திவில்லு மிதிவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய  ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் ஆதார வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நந்தன விமலவீர சம்பவம் இடத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.