மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் நேற்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவத்தில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.