இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.பாணத்துறை - வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27 வயது இளைஞரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது மரணத்திற்குப் பின்னர்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.