ஆசிய அபிவிருத்தி வங்கியின் மதிப்புமிக்க TFP விருதுகள் 2020இன் வருடத்துக்கான வர்த்தக ஒப்பந்த விருதை மக்கள் வங்கி வென்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கி(ADB) > Standard Chartered வங்கியுடன் கூட்டிணைந்து  மதிப்புமிக்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் வர்த்தக நிதித்திட்ட விருதுகள் 2020இல் (TFP Awards 2020 ஆண்டுக்கான வர்த்தக ஒப்பந்த விருதை வழங்கி மக்கள் வங்கியை அங்கிகரித்தது. 

இந்த TFP விருதுகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்குதாரர் வங்கிகளை அங்கிகரிக்கின்றன. அத்தோடு இவ்விருதானது விழாவின் முக்கிய விருதுகளில் ஒன்றாகும். 200க்கும் மேற்பட்ட ஆசிய வங்கிகளை உள்ளடக்கிய கடுமையான சுயாதீன மதிப்பீட்டைத் தொடர்ந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 

சர்வதேச வர்த்தகத்தை ஆதிரிக்க வங்கிகளுக்கு உத்தரவாதங்களையும் கடன் வசதிகளையும் இந்த TFP வழங்குகிறது. யுனுடீயின் யுயுயு கடன் மதிப்பீட்டின் பின்புலத்துடன் இத்திட்டம் ஆசிய வங்கியுடன் இணைந்திருக்கும் 200க்கும் மேற்பட்ட கூட்டாளர் வங்கிகளுடன் இணைந்து நிறுவனங்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையான நிதியுதவிகளை வழங்குகின்றது. 

2009ஆம் ஆண்டிலிருந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் TFP ஆனது அபிவிருத்தியடைந்து வரும் ஆசியாவில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் முதல் மருத்துவ பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் வரையிலானவை உள்ளடங்கலாக 12,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. 

நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கி, கொவிட் 19 இன் நெருக்கடி மிக்க காலத்தின் போதும் உலகெங்கிலுமுள்ள சக நிறுவனங்களுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தமது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கைக்கான வர்த்தக பாதைகளைத் திறந்து வைத்துள்ளது. 

ஏப்ரல் 2020இல் கொவிட் நெருக்கடியின் உச்சகட்டத்தில் நாடு இருந்த பொழுது, முக்கியமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான பரிவர்த்தனைகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இந்த அங்கிகாரத்தின் மூலம் வங்கியானது தேசத்திற்கு வழங்கிடும் முக்கிய சேவைகளுக்காக மீண்டும் சிறப்பிக்கப்படுகின்றது. 

மக்கள் வங்கி அதன் வர்த்தக நிதி வசதிகளைப் பயன்படுத்தி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதை சாத்தியமாக்கியது. காரணம் நிலவிய அபாய உணர்வுகள் காரணமாக வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்ய நிறுவனங்கள் தயங்கியமையே ஆகும். 2011ஆம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வர்த்தக நிதித்திட்டத்துடன் (TFP)இணைவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நிதி வசதிகளை வழங்கிடும் திறனை வங்கி மேம்படுத்திக் கொண்டது.

இலங்கைக்கு அல்லது இந்த பிராந்தியத்துக்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது அவற்றின் வங்கிகள் ஆபத்து வரம்புகளை கொண்டிருந்தன. இதனால் அவை வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. இலங்கையானது சில வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட உள்ளக ஆபத்து வரம்புகளை மீறக்கூடிய B-' நிலை மதிப்பீட்டினை Fitch Ratings  இல் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக இலங்கையில் ஒரு வாடிக்கையாளரால் திறக்கப்பட்ட கடன் கடிதத்தை மற்றொரு தரப்பினரால் உறுதிப்படுத்த எதிர்த்தரப்பு வங்கி விரும்பக்கூடும். இது மேலதிக செலவினை ஏற்படுத்தும். 

ஆனால் இந்த வர்த்தக நிதித்திட்டத்துடன் TFP இணைந்ததன் பின்னர் மக்கள் வங்கிக்கு ஒரு யுனுடீ உத்தரவாதத்தினை பயன்படுத்தவும் இலங்கை நிறுவனங்களுடன் வணிகம் செய்ய வெளிநாட்டு தரப்பினருக்கு ஆறுதல் அளிக்கவும் முடியும்.  ஒரு வங்கியை அதன் திட்டத்தில் மதிப்பீடு செய்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் பேணப்படும் உயர் தரங்களின் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் யுனுடீ உத்தரவாதத்தினை மதிக்கின்றன. சமீபத்திய கடன் தரமதிப்பீட்டின் போது TFP இலங்கைக்கு உதவியதன் மூலம் வணிகங்களை தொடர்ந்தும் செய்ய முடிந்தது. 

மக்கள் வங்கி சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் வரை ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது. இது ரூ. 2.1 ட்ரில்லியன் பெறுமதியிலான சொத்துக்களைக் கொண்டும் விளங்குகிறது. 59 ஆண்டுகளுக்கு முதல் தொங்கப்பட்டதிலிருந்து மக்கள் வங்கி, நாடு முழுவதும் உள்ள அதன் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. மேலும் அதன் நிதிச் சேவைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்வதன் மூலம் பலரது வாழ்வினை மேம்படுத்திட அதன் வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துகிறது. 

நாட்டு பிரஜைகளின் நிதித்தேவைகள் பற்றிய நுண்ணறிவினைக் கொண்டு, இளையோர் முதல் பெரியோர் வரையிலான குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு மக்கள் வங்கி பாடுபட்டு வருகிறது. மக்கள் வங்கி அதன் மிகப்பெரிய 739 கிளைகளின் வலையமைப்புடன் நாடு முழுவதும் உள்ள 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் டிஜிட்டல் வங்கிச் சேவைகளில் தலைவராகவும் விளங்குகிறது. நாடு முழுவதும் வியாபித்திருக்கும் மக்கள் வங்கியின் 200க்கும் மேற்பட்ட சுய வங்கிச் சேவை அலகுகளின் வலையமைப்புடன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கிளைக்குச் செல்லாமலே 24 மணிநேரமும் 365 நாட்களும் வசதியான மற்றும் வினைத்திறன் மிக்க வங்கி அனுபவத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். 

இது வாடிக்கையாளர்களுக்கு வங்கிக்கு செல்லாமலேயே தமது ஏராளமான வங்கிப் பரிவர்த்தனைகளை மிகவும் வினைத்திறனுடனும் வசதியுடனும் நடத்திட உதவுகிறது. விவசாயம், ரியல் எஸ்டேட், வணிக அபிவிருத்தி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதிகள் போன்ற தொழில்களை எப்போதும் ஆதரிப்பதன் மூலம் மக்கள் வங்கியானது நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதில் தொடர்ந்தும் முன்னணியில் இருந்து வருகிறது.

படம்2: மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக