ஊரடங்கு நீடிப்பு குறித்து முழுவிபரம்!

02 Nov, 2020 | 12:22 AM
image

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே கடந்த இரு தினங்களும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்நிலையைக் கருத்திற் கொண்டு மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இம்மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

விசேட அறிவித்தலொன்றின் மூலம் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கடந்த 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனை 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த இரு தினங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு திங்களன்று ஊரடங்;கை நீக்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

அதற்கமைய இம்மாதம் 9 ஆம் திகதி காலை 5 மணி வரை மேல் மாகாணம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் தொடர்புகள் குறித்து ஆராய்ந்து பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பேலியகொடை, கேகாலை, குருணாகல் மற்றும் குளியாபிட்டி ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மேல் மாகாணம் மாத்திரமன்றி இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கும் , குருணாகல் நகரசபை எல்லைக்கும் , குளியாபிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் இதே போன்று 9 ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும்.

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மக்களை அனைவரும் தத்தமது வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வேறெந்த தேவைக்காகவும் வெளியிடங்களுக்குச் செல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கப்பட மாட்டாது. தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதோடு தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய முதலாம் மற்றும் ஏனைய தொடர்பாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவு பொருட்கள் நிவாரணம் வழங்கப்படுவதோடு , ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு கடந்த முறையைப் போன்று 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக குறித்த பகுதிக்குள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அத்தோடு கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36