குடிவரவு –  குடியகல்வு  திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொது மக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இந்திணைக்களத்தின் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும் வார நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை கடவுச்சீட்டு பிரிவிற்கு 070 7101060, 070 7101070 என்ற இலக்கங்களுக்கும் , குடியுரிமைப்பிரிவிற்கு 070 7101030 என்ற இலக்கத்திற்கும் , வெளிநாட்டு தூதரகப்பிரிவிற்கு 011 5329233, 011 5329235 என்ற இலக்கங்களுக்கும் , வீசா பிரிவிற்கு 070 7101050 என்ற இலக்கத்திற்கும் துறைமுகங்கள் பிரிவிற்கு 077 7782505 இன்ற இலக்கத்திற்கும் அழைத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.