திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை விஹாரையின் விஹாராதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை 31.10.2020 காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்,  இலங்கைத்துறையிலுள்ள பக்வத விஹாரைக்குச் சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விஹாராதிபதியிள் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.