சுகாதாரதுறை, மருத்துவர்கள் ,சமூகப்பொறுப்புள்ளவர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு ஏற்ப ஓவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட்டு எங்களை நாங்கள் பாதுகாத்துகொள்ள வேண்டும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே. எம்.நிலாம் தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய  சூழல் ஆபத்தாகி வருவதாக அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இத்தகைய அறித்தல்களை நாங்கள் உள்வாங்கி கொண்டவர்களாக எங்கள் பாதுகாப்பை நாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டும். 

 வயோதிபர்கள், சிறுவர்கள் தொடர்பில் கூடிய கவனம் கொள்வோம். வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்கள் தொடர்பில் கூடிய கவனம் எடுத்து, கிராம அலுவலர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் அறிவித்து, அவர்களையும் பாதுகாத்து அயலவர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். 

 மேலும், சுயபாதுகாப்பும் அடக்கடி கைகளை கழுவுதல் சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்றார்.