நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் 02 ஆம் கட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை (03.11.2020) முதல் ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 4,64,254 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக அரசாங்கத்தினால்  ஒரு தொகைப்பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.