கனேடிய நகரமான கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரழந்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த கத்திக் குத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. 

எனினும் பொலிசார் இதுவரை எந்த மரணத்தையோ அல்லது காயத்‍தையோ உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அறிக்கையொன்றையும் பொலிஸார் வெளியிடவுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க பழைய கியூபெக்கில் பாராளுமன்றை சுற்றியுள்ள பகுதியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.