மன்னார் - அல்லியானிகோட்டை கடற்கரை  பகுதியில் கேரள கஞ்சாவுடன் மீனவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மீனவரிடம் இருந்து 139.5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 39 இலட்சம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மீனவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.