பெங்களூருவை வீழ்த்தி முன்னேறியது ஐதராபாத்

Published By: Vishnu

01 Nov, 2020 | 07:16 AM
image

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

13 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 52 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

சார்ஜாவில் நேற்று ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி ஐதராபாத்தின் பந்து வீச்சுகளில் திணறிப்போனது. ஆரம்ப வீராக களமிறங்கிய தேவ்தத் பட்டிக்கல் (5 ஓட்டம்) விராட் கோலி (7 ஓட்டம் என சண்டிப் சர்மாவின் பந்து வீச்சுகளில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த டி வில்லியர்ஸ் (24 ஓட்டங்களுடன்) ஆட்டமிழந்து வெளியேறினார். பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணமே இருந்தது. 

அதனால் அந்த அணியின் ஓட்ட வேகம் மந்த கதியில் சென்றது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது.

பெங்களூரு அணி சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஜோஷ் பிலிப் மாத்திரம் அதிகபடியாக 32 ஓட்டங்களை எடுத்தார்.

ஐதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் சண்டிப் சர்மா மற்றும் ஹோல்டர் தலா இரு விக்கெட்டுகளையும், நடராஜன், நதீம் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 121 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் முதல் விக்கெட் 10 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

டேவிட் வோர்னர் 8 ஓட்டங்களில் வொஷிங்டன் சுந்திரின் பந்து வீச்சில் உதானவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டேயுடன் விருத்திமன் சஹா ஜோடி சேர்ந்து சற்று நேரம் நிலைத்தாடினார்.

எனினும் சஹா 39 ஓட்டங்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டேவின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தாலும், 26 ஓட்டங்களில் பிடிகொடுத்து அவரும் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் (8 ஓட்டங்கள்), அபிஷேக் சர்மா(8 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. 

இறுதியாக ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட  121 ஓட்டத்தை எடுத்து வெற்றி பெற்றது. 

ஜேசன் ஹோல்டர் ஓட்டங்களுடனும் மற்றும் அப்துல் சமத் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41