பிரபல ஸ்கொட்லாந்து நடிகர் சேர் சீன் கனோரி (Sir Sean Connery) தனது 90 ஆவது வயதில் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆகஸ்ட் 25, 1930 ஆண்டு பிறந்துள்ள சேர் சீன் கனோரி ஒரு ஓய்வு பெற்ற ஸ்கொட்டிஷ் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். 

Original' James Bond actor Sir Sean Connery dies at age 90 - CityNews  Toronto

இவர் பஹாமாஸில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சேர்  சீன் கனோரி  “ஜேம்ஸ் பாண்ட்” கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் மிகவும் பிரபலமானார் . ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை முதன்முதலில்  திரையுலகுக்கு  அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையே சாரும்.

நடிப்பு திறமையினால் ஐந்து தசாப்தங்களாக திரையுலகில்  நீடித்த இவருக்கு 1988 ஆம் ஆண்டில் “தி அண்டச்சபிள்ஸில்” என்ற திரைப்படத்திற்காக ஒஸ்கார் விருது கிடைத்தது.

இவரது திரைப்பட வாழ்க்கையில் மார்னி , தி நேம் ஆஃப் தி ரோஸ் , தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ரார்டினரி ஜென்டில்மேன் , இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ரூஸேட் , தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர் , ஃபைண்டிங் ஃபாரெஸ்டர் , ஹைலேண்டர் , கொலை ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் , டிராகன்ஹார்ட் மற்றும் தி பாறை  ஆகிய திரைப்படங்கள் மிகவும் பேசப்பட்டவை யாகும். 

கடந்த 1999 இல், இவர் "நூற்றாண்டின் கவர்ச்சியான மனிதர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். திரைப்பட நாடகத்திற்கான சேவைகளுக்காக 2000 ஆம் ஆண்டு இவர்க்கு கனோரி நைட் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.