நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்றின் காரணமாக, இன்று வரை (31.10.2020) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.அத்துடன்  ஆயிரத்திற்கும் அதிகமான குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களாகவே குறித்த பொலிஸ் அதிகாரிகள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அண்மையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  மீன் கொள்வனவு செய்வதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ளமையினாலேயே கொரோனா தொற்று பரவியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.