யாழ்ப்பாணம் - காரைநகர் - தோப்புக்காடு பகுதியில் 82 கிலோ கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருள் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா தொகையை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.