இந்தியாவில் தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித் மாணவன் நேற்று சோமங்கலம் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தர்காஸ் கிராமத்தில் விண்ணேற்பு மாதா ஆலய கலையரங்கத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது 5 பேர்  கொண்ட மர்ம கும்பல் மாணவனை வழிமறித்து சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது.

தகவலறிந்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற சோமங்கலம் பொலிஸ் நிலைய பொலிஸார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாணவனின் அண்ணன் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் சிறை கைதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.