ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1480 பேர் கைது : 218 வாகனங்கள் பறிமுதல்

Published By: Digital Desk 3

31 Oct, 2020 | 12:48 PM
image

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 1480 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 218 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது முகக்கவசங்கள் அணியாத மற்றும் நபர்களுக்கிடையில் இடைவெளி  பேணாமை தொடர்பில் மாத்திரம் 39 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணம், குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளில் 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டதை மீறியமை தொடர்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி தொடக்கம் இன்று சனிக்கிழமை காலை ஆறு மணிவரையில்  221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயன்படுத்திய 40 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரையில் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக அதிகூடிய தொகையானோர் இதன்போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில்  சமூக இடைவெளி பேணாதோர் மற்றும் முகக்கவசங்கள் அணியாதோரை கைது செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த போதிலும் நேற்றுமுன்தினம் வரையில் பொலிஸார் அத்தகைய ஒருவரையும் கைது செய்யவில்லை. அறிவுறுத்தல்களை மாத்திரமே வழங்கி வந்தனர்.

எனினும் நேற்று வெள்ளிக்கிழமை முதல் இத்தகைய நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன்,அதற்கமைய இது தொடர்பில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் களுத்துறை,கம்பஹா,நீர்கொழும்பு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டி மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளுக்கு  கடந்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 1480 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 218 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22