பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை திருத்தம் செய்ய சீன நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் குழு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

"இதுவரை செயலிழப்பிற்கான காரணம் தெளிவாக இல்லை.  7 நாட்களும் 24 மணித்தியாலமும் பல மாதங்களாக இயங்கிய பிற இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு பராமரிக்கப்படும்" என சீனத் தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

பி.சி.ஆர் இயந்திரத்தின் செயலிழப்பு காரணமாக, கிட்டத்தட்ட 20,000 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.