அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட அதிகூடிய பாதிப்பாக உள்ளது.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,000 ஐ எட்டியுள்ளது.

அமெரிக்காவில் நாளாந்த நோய்த் தொற்றுச் சம்பவங்கள் 100,000ஐ எட்டக் கூடும் என்று அரசின் பிரதான தொற்றுநோய் நிபுணர் எச்சரித்திருக்கும் நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதே நாளில், 1,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா  வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவில் தேசிய இறப்பு எண்ணிக்கை மற்றும் வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து செல்கிறது.

இதுவைரை அங்கு கொரோனா தொற்றால் 9,036,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 229,594 பேர் உயிரிழந்துள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.