பி.சி.ஆர்.பரிசோதனையெனக் கூறி கொள்ளை : மோசடிக் கும்பலைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

30 Oct, 2020 | 08:49 PM
image

(செ.தேன்மொழி)

பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்வதாக குறிப்பிட்டு கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் காணுவதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் மோசடி காரர்கள் சமூகத்தில் இருப்பதால், அது போன்ற சதி காரர்களிடமிருந்து பொது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்காக பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளப்போவதாக குறிப்பிட்டு கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மஹாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு நேற்று வியாழக்கிழமை சென்றுள்ள இந்த கொள்ளையர்கள்,வீட்டில் இருப்பவர்களுக்கு தாம் பொது சுகாதார பரிசோதகர்கள் என்றும்,பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வந்துள்ளதாகவும் குறிப்பிட்டே இவ்வாறு மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் சென்றுள்ளதுடன், சந்தேக நபர்கள் வீட்டில் இருந்தவர்களுக்கு மருந்து வில்லை ஒன்றை வழங்கி அதனை அருந்துமாறும் தெரிவித்துள்ளனர்.

மருந்தை அருந்தியவுடன் வீட்டார் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது மயக்கமுற்ற வீட்டார் இன்று வெள்ளிக்கிழமை காலையிலேயே மீண்டும் சுயநினைவுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மஹாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பி.சீ.ஆர் பரிசோதனைகள் செய்வதற்கு முன்னர் ஒருபோதும் மருந்து அருந்த வேண்டி தேவையில்லை என்று வைத்திய நிபுணர்களும், பொது சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்துள்ளனர். 

அதனால் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.  இவ்வாறான நெருக்கடி நிலைமையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி காரர்கள் சமூகத்தில் இருப்பதினால் மக்கள் இது போன்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38