மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மற்றும் மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட இரு கொரோனோ தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆரையம்பதியில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துவருவதையடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக இன்று வெள்ளிக்கிழமை (30) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு மூடி கிருமிநாசினி விசிறி சுத்தப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 3 ஆயிரம் பேர் தொழில் புரிந்துவருகின்றனர் இந்த மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தணியையடுத்து இந்த ஆடைத்தொழிற்சாலையில் தற்போது ஊழியர்கள் குறைக்கப்பட்டு இங்குள்ள பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது ஆடைத் தொழிற்சாலை இயங்கிவருகின்றது.
இருந்தபோதும் தற்போது களுவாஞ்சிக்குடி மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இருவருது சகோதரிகள் உறவினர்கள் குறித்த அடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக இன்றில் இருந்து மூடி சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் ஆடைத்தொழிற்சாலை நிருவாகத்திற்கு அறிவுரை வழங்கியியுள்ளனர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கைகள் வந்த பின்னர் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கமுடியம் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM