கட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை காண, பெண்ணின் உடையை அணிந்து வந்த காதலனை கட்டுநாயக்க  விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபராவார். 

இன்று காலை 11 மணிக்கு கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த தனது காதலியை காணவே வந்ததாக தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.