கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் சின்ன டிரேட்டன் பிரிவு, கே.ஒ பிரிவு, ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இவர்கள் இருவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று உறுதியான நிலையில் அவர்கள் இருவரும் அம்பாறை பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்படவுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து கொட்டகலை நகரிற்கு வரும் பிரதேச மக்களை சுகாதார நடைமுறைகளைகளுக்கு ஏற்ப வர வேண்டும் எனவும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும், நகரிற்கு அநாவசியமாக வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM