“தினந்தோறும் புத்துணர்ச்சிக்கான”உத்தரவாதத்தையளிக்கும் SINGER, BEKO குளிர்சாதனப்பெட்டிகள்

Published By: Priyatharshan

23 Jul, 2016 | 01:04 PM
image

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற பிரமாண்டமான நிகழ்வொன்றில் புத்தம்புதிய Beko வர்த்தகநாம குளிர்சாதனப் பெட்டிகளை இலங்கையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

சிங்கர் ஸ்ரீலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

Beko அறிமுகப்படுத்தியுள்ள புத்தம்புதிய குளிர்சாதனப்பெட்டி உற்பத்தி வரிசையானது உணவை தினசரி புத்துணர்ச்சியுடன் வைத்துப் பேண உதவி, மிகவும் முக்கியமான விட்டமின்களை இழந்துவிடாது பாதுகாத்து, உங்களுடைய முழுக் குடும்பத்திற்கும் ஒட்டுமொத்த நலச்செழுமையைத் தருகின்றது. 

இப்புதிய குளிர்சாதனப்பெட்டி உற்பத்தி வரிசையானது, தனித்துவமான அம்சங்கள் மற்றும் நவீன வடிவமைப்புக்களுடன், நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும் EverFresh+® தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. “தினந்தோறும் புத்துணர்ச்சி” என்ற உற்பத்தி உறுதிமொழிக்கு இணங்க,ஈடுஇணையற்ற குளிரூட்டல் தீர்வுகளை வழங்கி, இலங்கையிலுள்ள நுகர்வோர்களுக்கு அவர்களின் தினமும் புத்துணர்ச்சிக்கான தாகத்தை ஈடுசெய்யும் வகையில் இப்புதிய உற்பத்தி வரிசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் இன்னமும் உபயோகிக்காத மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை சில நாட்களுக்கு பின்னர் வீச வேண்டிய நிலைமையை விடுத்து, அவற்றை நீண்ட காலத்திற்கு வைத்துப் பேணுவதற்கு  Beko EverFresh+® தொழில்நுட்பம் உங்களுக்கு உதவுகின்றது. 

Beko குளிர்சாதனப்பெட்டியிலுள்ள மரக்கறி வகைகள் மற்றும் பழ வகைகளை வைத்துப்பேணுவதற்கான விசேட அறையில் 30 தினங்கள் வரை அவற்றை நன்றாகப் பேண முடிகின்றது (உலகின் முன்னணி ஆய்வு, சரிபார்ப்பு,சோதனை மற்றும் சான்று அங்கீகார நிறுவனமான SGS இனால் சோதனை செய்யப்பட்டுள்ளது). 

இந்த வசதியானது ஈரப்பதனை துல்லியமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுடன், காற்று முகவாய்கள் மூலமாக ஒடுக்கத்தைக் குறைத்து, மாறுபட்ட வெப்பநிலை அளவுகளை குறைப்பதன் மூலமாக பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை வழமையிலும் பார்க்க 3 மடங்கு அதிகமான காலத்திற்கு மிருதுவாகவும், புத்தம்புதிய தன்மையுடனும் பேண உதவுகின்றது. 

இது முன்னரை விடவும் நீங்கள் உங்களது குளிர்சாதனப்பெட்டியில் உணவை புத்தம்புதியதாகவும் ஆரோக்கியமாகவும் அதே சுவையுடனும் வைத்துப் பேண உதவுகின்றது.

Beko Active Fresh Blue Light TM உங்களது பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை 30% அதிக சிறப்புடன் பாதுகாக்க உதவுவதுடன் உங்களுடைய உணவு புத்தம்புதியதாகவும் நன்றாகவும் இருக்கும் வகையில் விட்டமின் சி இன் அளவு மற்றும் ஏனைய முக்கியமான ஊட்டச்சத்துக்களை அதன் தரம் மற்றும் அளவு மாறாது அவ்வாறே பேணுகின்றது.

சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் குறிப்பிடுகையில்,

“2013 ஆம் ஆண்டில் Beko உடன் நாம் ஏற்படுத்தியிருந்த பங்குடமை, மகத்தான வெற்றியை அளித்துள்ளதுடன், Beko விற்பனையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு வர்த்தகநாமமாக Beko திகழ்வதுடன் அண்மைக்காலங்களில் ஆசியாவிலும் தனது பிரசன்னத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது”.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க கூறுகையில்,

“உள்நாட்டில் Beko உற்பத்திகளுக்கு நிலவுகின்ற அதிக கேள்வியை ஈடுசெய்யும் வகையில் நாம் இன்று Beko குளிர்சாதனப்பெட்டிகளின் புதிய உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தி வைத்துள்ளோம். 

ஐரோப்பாவில் முதலாவது ஸ்தானத்தில் திகழுகின்ற வர்த்தகநாமம் என்ற வகையில் இதன் கவர்ச்சியான உற்பத்தி வழங்கல்களுடனான இலங்கை நுகர்வோர் மத்தியில் இந்த வர்த்தகநாமம் அடைந்துள்ள பிரபலமானது இன்னும் அதிகரிக்கும் என சிங்கர் உறுதியாக நம்புகின்றது”. 

“நவீன வடிவமைப்புக்கள் மற்றும் அதிசிறந்த புத்தாக்கங்களை நாடுகின்ற வேகமான உலகில் சுறுசுறுப்பான தலைமுறையினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் குறிப்பிடத்தக்க பல்வேறு வீட்டு உபயோக உற்பத்திகளை Beko வழங்கி வருகின்றது”.

எரிசக்தி மற்றும் வளங்களைப் பாதுகாப்பதற்கான தேவையானது முன்னர் இருந்ததை விடவும், தற்போது மிக முக்கியமாக காணப்படுகின்றது. Beko ஆனது ProSmart inverter தொழில்நுட்பத்தின் மூலமாக A+ எரிசக்தி தரப்படுத்தல்களுடன் அறிமுகப்படுத்தும் உற்பத்திகள், அதனையொத்த உற்பத்தி ஒன்றுடன் ஒப்பிடுகையில் 30% குறைந்த அளவிலான எரிசக்தியை உள்ளெடுப்பதுடன் அதன் மூலமாக மின்சார பாவனையை குறைக்க உதவுகின்றது.

NeoFrost TM தொழில்நுட்பத்தைக் கொண்ட Beko நவீன குளிர்சாதனப்பெட்டிகள், மிகச் சிறந்த குளிரூட்டல் மற்றும் உறைவிப்பு பெறுபேற்றுத்திறனுக்கு ஏற்ற வகையில் உட்புற அறைகள் மற்றும் உறைவிப்பு அறைகளில் அதியுச்ச ஈரப்பதனைப் பேண உதவுகின்றது. Beko கொண்டுள்ள செயற்பாடு கொண்ட இரட்டை குளிர்வித்தல் தொழில்நுட்பத்தின் காரணமாக உள் அறைகள் மற்றும் உறைவிப்பு அறைகள் சுயாதீனமான குளிரூட்டல் முறைமையைக் கொண்டுள்ளதுடன் புத்தம்புதிய பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை நீண்ட காலத்திற்கு வைத்துப் பேணுவதற்கு அதியுச்ச அளவில் ஈரப்பதனை வழங்குவதுடன், குளிர்விப்பு அறைகளிலுள்ள உணவுகள் உறைவடைவதையும் தடுக்கின்றது. IronGuard TM தொழில்நுட்பத்தின் உதவியுடன் துர்வாடை எழுவது தடுக்கப்படுவதுடன் அவ்வாடை உங்களது குளிர்சாதனப்பெட்டிக்கு வெளியில் செல்வதையும் தடுக்கின்றது.

இப்புதிய அறிமுகம் தொடர்பில் BEKO நிறுவனத்தின் பொதுநலவாய சுதந்திர நாடுகள் அண்டை கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளரான செய்ஹான் சீஹான்  கூறுகையில்,

“இப்புதிய Beko குளிர்சாதனப்பெட்டி உற்பத்தி மூலமாக இலங்கை மக்கள் அனைவரும் புத்தம்புதிய, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். எந்த விதமான சமையலறைக்கும் ஏற்றவாறு, தனித்துவமான தேவைகள், அளவுகள் மற்றும் வர்ணங்களுடன் கிடைக்கின்ற இந்த குளிரூட்டல் தீர்வுகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு Beko இடமிருந்து மிகவும் உகந்த சாதனமொன்று கிடைப்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது. வீட்டு உபயோக சாதனங்கள் தொழிற்துறையில் இந்த புதிய பரிமாணத்தின் வருகையுடன் வாடிக்கையாளர்கள் Beko உற்பத்திகள் அனைத்திற்கும் 12 வருட சர்வதேச உத்தரவாதத்தையும் பெற்று அனுபவிக்க முடியும்”.

இப்புத்தம்புதிய Beko குளிர்சாதனப்பெட்டிகள் ரூபா 69,999 என்ற விலை முதல் கிடைக்கப்பெறுவதுடன் சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகளை உள்ளடக்கிய 420 இற்கும் மேற்பட்ட விற்பனை காட்சியறைகள் அடங்கிய நாட்டின் மிகப் பாரிய விற்பனை வலையமைப்பின் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றன.

Beko இன் உற்பத்திகள் அனைத்தையும் பிரத்தியேகமாக சிங்கர் வழங்குவதுடன், வர்த்தக மற்றும் வீட்டு உபயோகங்களின் தற்கால தேவைகள் அனைத்தையும் ஈடு செய்கின்றன. 

BEKO உற்பத்திகளில் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட குளிர்சாதனப்பெட்டிகள், தனித்தியங்கும் மின்சார மற்றும் வாயு மற்றும் உள்ளிணைப்புச் செய்யப்பட்ட அடுப்புக்கள் சலவை இயந்திரங்கள், உள்ளிணைப்புச் செய்யப்பட்ட முகடுகள் மற்றும் அடுப்பு மாடங்கள், டிஷ்வோஷர்கள் மற்றும் உலர்த்திகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. தனது 60 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்ற BEKO வர்த்தகநாமம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஐரோப்பாவில் மிக அதிகமான வளர்ச்சி வீதத்தைக் கொண்டுள்ளதுடன் வீட்டு உபயோக சாதனங்களைப் பொறுத்தவரையில் ஐரோப்பாவில் முதலிடத்திலுள்ள மிகப் பாரிய வர்த்தகநாமம் என்ற தனது அந்தஸ்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. 

மேலும் உலகில் மிகச் சிறந்த உதைபந்தாட்டக் கழகங்களுள் ஒன்றான FC பார்சிலோனா கழகத்துடன் பங்குடமையையும் அது கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் BEKO இன் ஏகபோக விநியோகத்தராகவும்ரூபவ் அங்கீகரிக்கப்பட்ட பேணற் சேவைப் பங்காளராகவும் சிங்கர் தொழிற்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கியின் நன்கொடையுடன் 1990 சுவசெரிய...

2023-12-09 18:57:05
news-image

Blade V50 வடிவமைப்புடன் கூடிய புத்தம்...

2023-12-07 19:27:42
news-image

மக்கள் வங்கி உலக வங்கி தினத்தை...

2023-12-06 12:08:12
news-image

இலங்கை சந்தைக்கு சூரிய சக்தியில் இயங்கும்...

2023-12-05 17:04:15
news-image

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும்...

2023-12-05 17:03:04
news-image

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு...

2023-12-05 12:50:24
news-image

ஆளுமையுடன் 6வது அகவையில் Capital FM! ...

2023-12-01 19:15:50
news-image

25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் Ocean...

2023-12-01 10:43:40
news-image

சிறந்த முறையில் பரிவர்த்தனை : RDB...

2023-11-30 18:40:52
news-image

பாசிக்குடா மீளத்திறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் விசேட...

2023-11-29 20:54:15
news-image

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதியியல்...

2023-11-29 16:46:41
news-image

MMBL Money Transfer தனது 3000...

2023-11-27 18:00:41