அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்ட ஜீட்டா சூறாவளி காரணமாக குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜீட்டா தாக்கம் காரணமாக முதல் உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்பு லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸல் பதிவானது. அதன்படி 55 வயதுடைய நபர் ஒருவர் ஆவர்.

இதைத் தொடர்ந்து அலபாமா மற்றும் ஜோர்ஜியாவில் வீடுகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் மிசிசிப்பி பகுதியில் 58 வயதான நபர் ஒருவர் புயலை காணொளி எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஜீட்டா சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தின் மூலம் மீட்பு மற்றும் அவசர குழுக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இது லூசியானாவில் நிலை குலையச் செய்யும் இரண்டாம் வகை புயலாக புதன்கிழமை பிற்பகல் மிகவும் வலுப்பெற்றது.

அமெரிக்காவின் தென்கிழக்கின் பெரும்பகுதிக்கு ஜீட்டா சக்திவாய்ந்த காற்றைக் கொண்டு வந்தது, அங்கு 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூறாவளி லூசியானாவின் கடற்கரையில் 110 மைல் வேகத்தில் வீசியது, புதன்கிழமை பிற்பகல் டெரெபோன் பாரிஷில் உள்ள கோகோட்ரி அருகே வந்தது. 

அதன் கண் பின்னர் நியூ ஆர்லியன்ஸ் மற்றும் அண்டை பகுதிளான மிசிசிப்பி மற்றும் அருகிலுள்ள மாநிலங்களை நோக்கிச் சென்றது.

இந்த ஆண்டு லூசியானாவைத் தாக்கிய ஐந்தாவது புயலாக ஜீட்டா பெயரிடப்பட்டுள்ளது.