பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உட்பட மொத்தம் 22 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் 400 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு தனி தனிமைப்படுத்தல் நிலையங்கள் உள்ளன. மேலும் வைரஸ் பாதிப்புக்குள்ளான பொலிஸாருக்கு சிகிச்சை அளிக்க புனானை மற்றும் குண்டசாலை ஆகிய பகுதிகளில் சிறப்பு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.