மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது, 25 கிராம் ஹேரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 98 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், ஒரு கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஜீப்பில் பயணித்த சந்தேக நபர்கள் இரண்டு பேர் நேற்று பேலியகொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.