வவுனியா, முண்டிமுருப்பு பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாடசாலை சென்று வீடு திரும்பாத நிலையில்,பெற்றோரினால் வவுனியா பொலிஸார் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது நேற்றிரவு வீட்டின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து குறித்த மாணவன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.