வியாழக்கிழமை பிரான்ஸில் நைஸ் தேவலாயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முஹமது பதிவிட்ட பதிவை டுவிட்டர் நீக்கியுள்ளது.

பிரான்ஸில் நைஸ் தேவலாயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.

டுவிட்டர் பதிவில்,

முஸ்லிம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தை காண்பித்த ஆசிரியரை சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட மகாதீர், வெவ்வேறு கலாசாரத்தையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய மேற்கத்திய நடைமுறை, மதிப்புகள், வழக்கத்தை திணிக்க முற்படக்கூடாது என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை குறிப்பிட்டு மகதீர் முகம்மது கடுமையாக சாடினார்.

அவர் பதிவிட்ட 13 க்கும் அதிகமான டுவிட்டுகளில் சில விதி மீறல் பதிவு எனக்கூறி டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நூற்றுக்கணக்கில் டுவிட்டர் பயனர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.