சிகிரிய மத்திய கலாசார நிதியத்தின் 10 ஊழியர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிகிரிய மத்திய கலாசார நிதியத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவரின் மனைவி, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊழியரின் மனைவி லாகல கொவிட்-19 சிகிச்சை நிலையத்தில் தாதியர் ஆவர்.
இந் நிலையில் மேற்கூறப்பட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மொத்தம் 10 ஊழியர்களை அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிகிரிய மத்திய கலாசார நிதியத்தில் அநேக ஊழியர்கள் குருணாகல் மாவட்டத்தில் வசிப்பதால், அவர்களை தற்காலிகமாக பணிக்கு திரும்புவதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிகிரியாவுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினாலும், நாட்டின் கொவிட்-19 நிலைமைகளை கருத்திற் கொண்டும் சிகிரியா அருங்காட்சியகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM