இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்தின் இறுதி இறைதூதரான நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

நபி பெருமானார் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புக்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது தமது நம்பிக்கையென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பெரும் சவாலை எதிர்கொள்கிறது. இத்தகைய பின்பலத்தில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வாழ்வது உள அமைதியைப் பெற்றுத் தரும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேபோன்று நபிகள் பெருமானார் வாழ்நாள் முழுவதிலும் பேணிய குண நலன்களும், அவர் மனிதர்களுக்காகச் செய்த அர்ப்பணிப்புகளும் அளப்பரியவை. அவரது பிறந்த தினத்தை நினைவுகூரும் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.