நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 586 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 9,791 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 586 புதிய கொரோனா நோயாளர்களில் 467 பேர் மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 115 பேரும், நான்கு இந்தோனேஷிய கடற்படையினரும், ஒரு இலங்கை கடற்படை வீரரும் அடங்குவர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 6,313 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 67 நபர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்த நோயாளர்களது எண்ணிக்கையும் 4,142 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 435 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.