கொரோனா  தொற்றுக்குள்ளான ஒருவர் குணமடைந்த பின்பும் நீண்ட கால பக்கவிளைவுகளால் பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கோவிட் -19 தொற்று கால்விரல்களில் தோல் அழற்சி சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தோல் வீக்கமடைதல் மற்றும் சில்ப்ளேன் போன்ற கொப்புளங்களுக்கு வழிவகுக்கும். இவ்வறிகுறிகள் பொதுவாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் உருவாகி இயல்பாக ஒரு பதினைந்து நாட்களுக்குள் மாறிவிடும்.

A photo issued by Journal of the American Academy of Dermatology of a person showing the skin symptom known as Covid toes

ஆனால் சிலருக்கு, இத் தோல் பிரச்சினை 'நீண்ட கால கொரோனா பக்கவிளைவின் வெளிப்பாடாக மாறியுள்ளதாகவும், நோயாளிகள் வைரஸிலிருந்து குணமடைந்த பின்னரும் பல மாதங்கள் நீடிக்கும் எனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்துள்ளனர்.

இதில் வைரஸ் தொற்று காரணமாக ஊதா நிறமாக மாறும் 'கால்விரல்கள்' தொற்றுநோயிலிருந்து குணமடைந்த பின்பும் ஐந்து மாதங்களுக்கு நீடிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

The symptom typically develops within a week to four weeks of getting the infection

முந்தைய ஆராய்ச்சியின் படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேரில் ஒருவர் ஒருவித தோல் நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இது வைரஸ் ஏற்படுத்தம் பக்கவிளைவின் ஒரு பகுதி மட்டுமே எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.