தாய்வானில் இறுதியாக கொரோனா தொற்றாளர் அடையாம் காணப்பட்டு 200 நாட்கள் கடந்துள்ளதாகவும் கொரோானா தொற்றை கட்டுபடுத்துவதில் தாய்வான் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாய்வானில் இறுதியாக ஏப்ரல் 12 அன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து இதுவரை யாருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இந்த வெற்றியை குறிப்பிட்டு, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் மக்களை தொடர்ந்து முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளைக் கழுவவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுவரை அந்நாட்டில் 553 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் தொற்றுநோய் காரணமாக 7 மரணங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் தாய்வான் உள்நாட்டு பரிமாற்றத்தை நிறுத்தியுள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் மக்களிடையே புதிய கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், தாய்வானை விட்டு வெளியேறிய பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் நபர்களின் அறிக்கைகளை அடுத்து தாய்வான் உண்மையிலேயே கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.