இன்று மதியம் பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்தில்  மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் மூவர்  உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Three people have died - two of whom were beheaded - after a knifeman attacked the Notre Dame basilica in Nice at 9am on Friday, before he was shot and arrested by police

இது நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட் தாக்குதல் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் அவிங்கான் மாகாணத்தில் உள்ள மோண்ட்பவேட் என்ற நகரின்  ஒரு தெருவில் சுற்றித்திரிந்ததையடுத்து அவர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

A wounded person is taken away from the scene

ஒரே நாளில் பிரான்ஸில் இடம்பெற்றுள்ள இரண்டு பயங்கரவாத தாக்குதல் காரணமாக அந்நாட்டில் தற்போது பதற்றம் நிலவுகின்றது.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெளியே ஒரு பாதுகாப்புக் காவலர் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒருவர் ஒரு தேவாலயத்திற்கு அருகே கத்தியுடனும்,   மற்றொருவர் வாளுடன் ரயிலில் ஏற முற்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மையமாக வைத்து அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

A person who was wounded during the attack on a basilica in Nice is wheeled into the back of an ambulance

கடந்த 16ஆம் திகதி சாமுவேல் பெடி என்ற வரலாற்று ஆசிரியர் பயங்கரவாதியால் தலைதுண்டித்து கொல்லப்பட்டமையும் இதன் பின்னனியிலேயே. 

இந்நிலையில், இன்று பகல் வேளையில் பிரான்ஸின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த பயங்கரவாதி அங்கிருந்தவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியிருந்தான். இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து இம்மாதத்தில் இருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளனர்.

The first attack took place at 9am in Nice, before the second attack in Avignon two hours later. Separately, a guard at the French consulate in Jeddah, Saudi Arabia, was stabbed

இத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று  பிரான்ஸ் நாட்டின்  அனைத்து தேவாலயங்களிலும் ஒரே நேரத்தில் மணி ஓசை எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் இத் தாக்குதல் குறித்து சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.