கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ் வசதி மூலம் தாமாக பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள விரும்புவர்கள் வைத்தியசாலை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை நிலையங்களுக்கு செல்லாமல் வாகனத்திலிருந்தவாறே பி.சி.ஆர் சோதனையை செய்து கொள்ளமுடியும்.

எனினும், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் வைத்திய சாலைகள்  பி.சி.ஆர் சோதனைகளுக்கு அறவிடும் கட்டணம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளில் ஒரு பி.சி.ஆர் பரிசோதனைக்கு  6000 ரூபாய், நிர்ணயிக்கப்பட்ட போதும் பல தனியார் வைத்தியசாலைகள் தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் அறவிட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.