நாட்டை முடக்காது கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது - ரணில் ஆலோசனை

29 Oct, 2020 | 09:40 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்காது கொவிட்-19 வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது. மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் அரசாங்கம் இதைவிட அவதானமாக இருந்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மலையகத்திற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பிற்கு திரும்பிய நிலையில் இன்று வியாழக்கிழமை கட்சி உறுப்பினர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தார். இதன் போதே அவர்  இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பி.சி.ஆர் பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால் நோயாளிகள் இல்லை என முழு அளவில் பரிசோதனைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மாத்திரம் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்பேர்து நிலைமை பாரியளவில் மோசமடைந்துள்ளது.

கொவிட-19 வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இதனை விட அவதானமாக இருந்திருக்க வேண்டும். இனி நாட்டை முழு அளவில் முடக்காது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இயலாது. குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58