முடக்கப்பட்டது கரவெட்டி ராஜ கிராமம் : 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்

29 Oct, 2020 | 08:30 PM
image

வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ராஜ கிராமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

அதன்மூலம் ராஜ கிராமத்திலிருந்து வெளியேறவோ அல்லது ராஜ கிராமத்துக்குள் உள்நுழையவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று திரும்பிய பருத்தித்துறை மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர்களில் ஒருவர் ராஜ கிராமத்தை சேர்ந்தவர். அவர் கிராமத்தில் பலருடன் பழகியுள்ளார்.

இந்நிலையில் தொற்று பரவலை தடுப்பதற்காக ராஜ கிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சுமார் 60 குடும்பங்களை சேர்ந்த மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேபோல் பாசையூர் மேற்கு மற்றும் குருநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34