நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லொரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'ருத்ரன்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் கே பி செல்வா இயக்கத்தில் தயாராக,விருக்கும் திரைப்படம் 'ருத்ரன்'. இப்படத்தில் ராகவா லோரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ராகவா லொரன்ஸுடன்  ஜீ வி பிரகாஷ் குமார் இணையும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றி விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிறந்தநாள் காணும் ராகவா லொரன்ஸுக்கு  வாழ்த்து தெரிவிக்கும் வகையில், 'ருத்ரன்' படக்குழுவினர் படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இதனை ராகவா லொரன்ஸின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.